மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 119-வது பிறந்த நாள்; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலையணிவித்து மரியாதை
Madurai News

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 119-வது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் (07.02.2021) மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் மணிமண்டபத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.மாணிக்கம் ஆகியோர் மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, நினைவு மண்டபத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ.வினோத், மதுரை வடக்கு வட்டாட்சியர் முத்து விஜயகுமார் உள்ளிட்ட தமிழ் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.