செய்திகள்

மே 1- ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

No need to come to schools from May 1st

மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. கல்வித் துறையை பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு வீட்டுக் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே நேரம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now
Back to top button
error: