செய்திகள்

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இணையதளத்தில் முன்பதிவு

Corona vaccine for those over 18 years of age from May 1: early booking

மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை போடலாம் என்ற உத்தரவை அடுத்து அதற்கான முன்பதிவானது தொடங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரக்கூடிய சூழலில், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வருகிற 1-ம் தேதி முதல் 18 வயதை கடந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் அறிவித்தார்.

அதற்கான முன்பதிவு cowin.gov.in எனும் வலைதளத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தார். இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு என்பது தற்போது தொடங்கியிருக்கிறது. www.cowin.gov என்ற இணையதளத்தில் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் Arogya setu – UMANG App மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆரோக்கிய சேது, உமாங்க் செயலி இல்லாதவர்கள் மொபைல் எண்ணை கொடுத்து OTP பெற்று பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. ஆதார் எண் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து தடுப்பூசி போட முன்பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் உள்பட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப முன்பதிவு செய்யலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: