செய்திகள்

மேலூர் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையம்: மதுரை கலெக்டர் நேரில் ஆய்வு

Melur Municipal Election Vote Counting Center: Inspection by Madurai Collector

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மேலூர் எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என மொத்தம் 322 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.

இந்நகராட்சிக்கு உட்பட்டு 17,445 ஆண் வாக்காளர்கள், 18,358 பெண் வாக்காளர்கள்என மொத்தம் 35,803 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் வாக்குப் பதிவுக்காக 11 இடங்களில் 11 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையமாக மேலூர் எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மேலூர் நகராட்சிக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடிவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மதுரை கலெக்டர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்மைப்பட்டி, அட்டப்பட்டி, வஞ்சிநகரம், கீழநாட்டார் மங்கலம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மேலூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் / ஆணையாளர் சி.ஆறுமுகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / பொறியாளர் பா.பட்டுராஜன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: