செய்திகள்லஞ்சம்

மேலூரில் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், துணை புரிந்த புரோக்கர் கைது

Deputy District Collector, deputy broker arrested for taking bribe in Mellur

மேலூரில், லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அவருக்கு துணை புரிந்த புரோக்கர் மூக்கன் ஆகிய இருவரும் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அலங்காநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன்(46). என்பவர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலூர் கருத்தபுளியன்பட்டியில் வசிக்கும் பிரபு என்பவர் தனது மனைவி மாலதிக்கு 15 லட்ச ரூபாய் சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக துணை வட்டாட்சியர் மணிகண்டனை அணுகியுள்ளார்.

அதற்கு அவர், ரூ. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்தத் தொகையை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரபு லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் 20,000த்தை இன்று மாலை 6 மணி அளவில் பிரபு, மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் லஞ்ச பணத்தை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் கொடுக்குமாறு சமிக்கை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, லஞ்ச பணத்தை மூக்கனிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மூக்கனையும், துணை வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: