மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் | பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Led by Mayor V. Indrani Ponvasant | Public Complaints Camp

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (31.05.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் எண்.5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் வேண்டி 5 மனுக்களும், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பழுதுகள் தொடர்பாக 13 மனுக்களும்.
பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 11 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 7 மனுக்களும், சொத்து வரி விதிப்பு தொடர்பாக 6 மனுக்களும், காலிமனை வரி தொடர்பாக 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 1 மனுவும், பிற துறைகள் தொடர்பாக 82 மனுக்களும், இதர கோரிக்கை தொடர்பாக 10 மனுக்களும் என மொத்தம் 137 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மேலும் இம்முகாமில் சொத்துவரி பெயர் மாற்றதிற்கான ஆணைகளை மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கினார்.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் திதட்சிணாமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் தியாகராஜன், பாபு, மயிலேறிநாதன். நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.