மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் வரும் 6ந் தேதி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Public grievance redressal camp in Zone 2 on 6th under the leadership of Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும்,அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி எதிர்வரும் 06.09.2022 (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
(மண்டலம் 2 (வடக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்:
வார்டு எண்.1 விளாங்குடி, வார்டு எண்.2 கரிசல்குளம், வார்டு எண்.15 ஜவஹர்புரம், வார்டு எண்.20 விசாலாட்சி நகர், வார்டு எண்.21 அருள்தாஸ்புரம், வார்டு எண்.22 தத்தனேரி மெயின் ரோடு, வார்டு எண்.23 அய்யனார்கோவில்.
வார்டு எண்.24 மீனாட்சிபுரம், வார்டு எண்.25 பீ.பீ.குளம், வார்டு எண்.26 நரிமேடு, வார்டு எண்.27 அகிம்சாபுரம், வார்டு எண்.28 கோரிப்பாளையம், வார்டு எண்.31 தல்லாகுளம், வார்டு எண்.32 சின்னசொக்கிக்குளம்.
வார்டு எண்.33 கே.கே.நகர், வார்டு எண்.34 அண்ணா நகர், வார்டு எண்.35 சாத்தமங்கலம், வார்டு எண்.63 பாத்திமா நகர், வார்டு எண்.64 பெத்தானியாபுரம், வார்டு எண்.65 பி.பி.சாவடி, வார்டு எண்.66 கோச்சடை ஆகிய வார்டுகள்).
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.