செய்திகள்மாநகராட்சி

மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

Solid waste management awareness rally led by Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” மண்டலம் 3 வார்டு எண்.56 வெள்ளிவீதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேயர் வ.இந்திராணி, பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்பட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்த நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், இந்நிகழ்வில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக பேசிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை, மேயர், வழங்கினார்.

மேலும், பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியில் மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

மதுரை மாநகராட்சி; 15 பள்ளிகளில் நகரங்களின் தூய்மைக்கான இயக்கம் – திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார், உதவி ஆணையாளர் மனோகரன் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ் குமார், சுகாதார அலுவலர் வீரன், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: