செய்திகள்

மேயர் தலைமையில் எதிர்வரும் 10ந் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Mayor-led public grievance camp in Madurai Zone 2

மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்  தலைமையில் நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை மண்டலவாரியாக ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் நடைபெற உள்ளது.

அதன்படி எதிர்வரும் 10.05.2022 (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: