உணவுசைவம்

மென்மையான இட்லிக்கு

முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி முதல் 5  மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில்  அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விட்டு அரைத்து  எடுக்கவும். பிறகு அரிசியை அரைத்து அதனுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய  அரைப்பட வேண்டும்.

அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி  கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக  வரவேண்டும். இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலந்து,  இரவு முழுவதும் புளிக்க விடவும். காலையில் புளிக்க வைத்துள்ள மாவை அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில்  மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றினால் வெண்மையான மென்மையான இட்லி கிடைக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

13 + eighteen =

Close