
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராஜா, வார்டு கவுன்சிலர் சந்தான லட்சுமி ஆகிய இரண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு பொதுநபர் உட்பட தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக செல்வி என்பவரும், துணைத் தலைவராக சுதா என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை பொதுமக்கள் மற்றும் அரசிடமிருந்து கேட்டு பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கிராம பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1