
வாடிப்பட்டியில், மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அமைதிப் பேரணியில், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தமைலையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின், நான்காம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில், அமைதி பேரணியும், கலைஞரின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட துணை செயலாளரும், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினருமான ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தார். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் சோமசுந்தரபாண்டியன், பாலசுப்பிரமணியன், சேகர், மருதுபாண்டியன், அழகுபாண்டி, செயற்குழு தன்ராஜ், ஒன்றிய ச்செயலாளர்கள் சிறைச்செல்வன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதும்பு தனசேகர்,பேரூர் செயலாளர்கள் ரகுபதி, சத்தியபிரகாஷ், பொதுக்குழு கிருஷ்ணவேணி, மகளிரணி ரேனுகா ஈஸ்வரி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வாடிப்பட்டி ,எம்.டி.சி.சி. வங்கியிலிருந்து, துவங்கிய அமைதி பேரணி அண்ணா பேருந்து நிலையம் வந்தடைந்தது. அங்கு, அண்ணா சிலைக்கும் அதனருகே பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவ படத்திற்கும் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அனைத்து நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், இந்நிகழ்வில் ,மேலூர் சேர்மன் முகமதுயாசின், பேரூராட்சி துணை தலைவர்கள் வக்கில் கார்த்திக், கண்ணன், சாமிநாதன், பூச்சம்பட்டி சீனிவாசன், வக்கில் கலாநிதி, ஒத்தக்கடை சரவணன், அயூப்கான், கோவிந்தராஜ், சிபிஆர்.சரவணன், வக்கீல் முருகன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சோழவந்தான் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் சோழவந்தான் ஆர்.ஸ்டாலின் அய்யாவு, திரவியம், விநோத்,.
மற்றும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, திருகடகம் ராஜா என்ற பெரிய கருப்பன், இளைஞர் அணி வெற்றிச்செல்வன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பி ஆர் சி பாலு, ஊத்துக்குளி ராஜா, மாணவரணி எஸ் .ஆர். சரவணன், பன்னீர்செல்வம், வாடிப்பட்டி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள்.உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.