
மதுரை மாவட்டம், பரவை அருகில் வைகை ஆற்றில் குளிக்கச் மதுரை தெற்கு வாசல் பகுதியில் சேர்ந்த தனசேகரன் (23). கண்ணன் (20). இருவரும் அருகே உள்ள முத்தையா கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால், ஆழமான பகுதிக்குள் சென்றது மாயமானார்கள்.
இது குறித்து, இது கவனித்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த மதுரை டவுன் மோட்டார் வாகன நிறைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பல மணி நேரம் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் மீண்டும் இன்று காலை 6:00 மணி முதல் உடலை தேடும் பணி தொடங்கும் என நிலைய அலுவலர் கண்ணன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் இதே போன்று ஒரு ராணுவ வீரரும் ஒரு இளைஞரும் வைகை ஆற்றில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.