செய்திகள்

மீட்டர் கேஜ் வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்க பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு

Petition to Member of Parliament to re-run trains on meter gauge route

மதுரை மற்றும் பழனி வழித்தடத்தில் ஏற்கனவே இயங்கி வந்த மீட்டர் கேஜ் ரயில் வண்டிகளான…
1. கோயம்புத்தூர் – திருச்செந்தூர் Express
2. கோயம்புத்தூர் – மதுரை Intercity
3. கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் (Overnight express)
4. மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி (Tri Weekly Express)
மற்றும்
5. கோயம்புத்தூர் – திண்டுக்கல் (Passenger)
ஆகிய ஐந்து ரயில் வண்டிகளும் அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் அனைத்து வழித்தடத்திலும் முழுவதுமாக முடிந்த பிறகும் தற்போது வரை மேற்கூறிய ஐந்து ரயில் வண்டிகளும் இயக்கப்படவில்லை. இதனால் சாதாரண பொதுமக்கள் வியாபாரிகள் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பேருந்தில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் அன்றாடம் பயன்படுத்தி வந்த இந்த ஐந்து ரயில் வண்டிகளையும் மீண்டும் இயக்கிட வலியுறுத்தி Passengers Association -ஐ சேர்ந்த நண்பர்கள் கே.மோகன், Chamber of covai ICCIC சதீஷ் (DRUCC member), கே.ஜெயராஜ் ( DRUCC member) மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: