மாநகராட்சி

மிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.3 மிளகரணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியினை ஆணையாளர் ச.விசாகன்று (20.12.2019) திறந்த வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொடைக்கானலைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் வாஸ் இண்ஸ்ட்டியூட் நிறுவனம் மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், பொது கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் போன்ற குடிநீர் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட திட்டப்பணிகளை செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் எண்.1 வார்டு எண்.3 மிளகரணை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியும், பழுதாகி இருந்த 3 குடிநீர் தொட்டிகளை புதுப்பித்தும், மண்டலம் எண்.3 கீரைத்துறையில் புதிதாக ஒரு குடிநீர் தொட்டியும் பழுதாகி இருந்த 3 குடிநீர் தொட்டிகள் புதுப்பித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மிளகரணை பகுதியில் ஏற்கனவே இந்நிறுவனத்தின் சார்பில் 30 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிளகரணையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதிக்கு குடிநீர் தொட்டி அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடனடியாக அமைத்துத் தருமாறு ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.3 கீரைத்துறை மூலக்கரை மயானம் அருகில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடத்தினையும், டுரிப் நிதியின் கீழ் தெற்கு வெளி வீதி, ஏ.ஏ.ரோடு, சி;.எம்.ஆர். ரோடு, சி2சி2 ரோடு, ஐஐ ரோடு, கீழமாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள சாலை பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மூலக்கரை நுண்ணுயிர் உரக்கூடத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வாஸ் இண்டிஸ்டியூட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன், ஆர்.கண்ணன், உதவி ஆணையாளர் (பொ) சேகர், செயற்பொறியாளர் திரு.ராஜேந்திரன், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கியசேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப்பொறியாளர்கள் முத்துராமலிங்கம். .துர்காதேவி, காமராஜ், சுகாதார அலுவலர்கள்; விஜயகுமார், வீரன், சுகாதார ஆய்வாளர்கள் தமுரளிதரன், முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 3 =

Related Articles

Close