ஆர்ப்பாட்டம்செய்திகள்
மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Demonstration by STBI party in Madurai against the increase in electricity tariff

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பாக காமராஜர் சாலை மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தை காரணம் காட்டி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்திய ஆளும் திமுக அரசு, தற்போது மீண்டும் ஒன்றிய அரசின் அழுத்தத்தை காரணம் காட்டி அநியாயமாக மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்தும், மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வலியுறுத்தியு நூதன முறையில் சிமினி விளக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு, அரிக்கேன் விளக்கு விசிறி போன்ற கற்கால பொருட்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1