மாநில அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி | மதுரை அமெரிக்கன் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை
State Level Girls Sports Competition | Madurai American College achieved first place

நடப்பாண்டு, ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மீனா சுந்தரி அறக்கட்டளையின் சார்பாக மதுரை மங்கையர்க்கரசி கல்லூரியில் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றிருந்தனர், மூன்று நாள் நடைபெற்ற இந்தா போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுரி பெண்கள் அணி முதல் இடத்தையும், 2ம் இடத்தை சதக் அப்துல்லா கலைக்கல்லூரி திருநெல்வேலி அணியினரும்.
மற்றும் 3ம் இடத்தை சென்னை எஸ்டிஏடி அணியினரும், 4ம் இடத்தை மீனா சுந்தரி அறக்கட்டளை அணியினரும், 5ம் இடத்தை மதுரை லேடி டோக் அணியினரும் 6ம் இடத்தை மீனாட்சி கலைக்கல்லூரி மதுரை அணியினரும் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மற்றும் பயிற்சியாளர் தீபன் ராஜ், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.