செய்திகள்
மாநகராட்சி நிலத்தை தனியார் உணவகம் ஆக்கிரமிப்பு | மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றம்
Private restaurant occupation of corporation land | Corporation officials abruptly removed

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருந்த மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இருந்த உணவகம் நடத்திய உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70வது வார்டு பைபாஸ் சாலை வானமாமலை நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது இது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடமானது பலமுறை நோட்டீஸ் கொடுத்து காலி செய்யப்படவில்லை.
இந்நிலையில் அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்குள்ள பொருட்களை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், இந்த இடத்தில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்ட உள்ளதாகவும், இவரிடம் பலமுறை நோட்டீஸ் கொடுத்து இவர் காலி செய்ய மறுத்ததால் இன்று அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்ற என தெரிவித்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1