பெண்கள்மெடிக்கல்

மாதவிடாய் நின்றுவிட்டால் ?

பெண்களுக்கு பூப்பெய்திய பிறகும், கருத்தரித்த பிறகும், மாதவிடாய் நின்ற பிறகும், ஆண்களுக்கு வயதான பிறகும் உடல் எடை கூடுவது இயல்பு. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றம், தசை அளவு குறைதல், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்கள் உடல் எடையை கூட்டுகின்றன. வயதான பெண்களுக்கு, குறிப்பாக அவர்களது மாதவிடாய் நின்றபிறகு, அவர்களது வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு படிந்து இருக்கும்.

இந்த கொழுப்பு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்ற பிரச்சினைகளை தரக்கூடியது ஆகும்.  மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை நிறுத்த முடியாது என்றாலும் கூட, நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களையும், நம் உணவு முறையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தால் அதிகமாக உடல் எடை போடுவதைத் தவிர்க்கலாம்.

தேவைக்கேற்ற சூரிய ஒளி நம் மீது படுவது உடல் எடையை சரியான விகிதத்தில் வைத்திருக்க உதவுகிறது. சூரியஒளி நமக்கு தேவையான வைட்டமின்-D சத்து நம் உடலுக்கு சேர வகை செயகிறது. இந்த வைட்டமின் தான் நம் உடலில் உள்ள எலும்புகளில் கால்ஷியம் தாது சேர்ந்து வலிமையாக்க உதவுகிறது. உறுதியான எலும்புகள் நம் உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

two × 4 =

Related Articles

Close