அரசியல்செய்திகள்

மாணவி ஶ்ரீமதி வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் கோரிக்கை

DMUDika Treasurer Premalathavijayakant's request to form a committee headed by a retired judge regarding the case of student Smt.

மதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு:

தொடர்ந்து மக்களுக்கு அனைத்து வரிகளும் , விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் என விலைவாசி உயர்வு. அதுபோல ஜிஎஸ்டியில் ஏற்கனவே மக்கள் நிறைய வரிகளை கட்டிக் கொண்டுள்ளனர், வருமானத்திற்கு என்ன வழி என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் வெளியில் வர முடியவில்லை, வருமானம் இல்லை, அரசாங்கத்திற்கான வருமானத்தை மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது.

பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால் தேமுதிக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். கேப்டன் கூறியது போல இந்த விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பள்ளி மாணவிகள் தற்கொலை குறித்த கேள்விக்கு

இது சம்பந்தமாக நேற்று கூட கேப்டன் அறிக்கை விட்டிருந்தார். மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயவில்லை திருவள்ளுவரில் ஒரு மாணவி தற்கொலை, தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உண்மையில் அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா அல்லது தற்கொலையா என தெரிய வேண்டும். மாணவிகள் உண்மையில் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அந்த தற்காலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் காங்கிரசாரின் போராட்டம் குறித்த கேள்விக்கு:

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக மீது பல்வேறு ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள் இன்று பாஜக ஆட்சியில் உள்ளதால் காங்கிரஸ் மீது முன்னாள் போடப்பட்ட ஊழல் வழக்கை தற்போது கொண்டு வருகிறார்கள். ஆளுங்கட்சி முன்னாள் ஆளுங்கட்சி மீது ஊழல் வழக்குகள் போடுவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும்.

தப்பு செய்திருந்தால் அதற்கான பலனை காங்கிரஸ் அனுபவிக்க வேண்டும். கேப்டன் கூறுவது போல உப்பு தின்னால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு சமந்தான். நிச்சயமாக உண்மையில் தப்பு செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: