மாடுங்க தம்பினா மாடுபிடி வீரர்கள் அண்ணன்கள் | ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி யோகதர்ஷினி
Jallikattu Veera Tamilachchi Yogadarshini
#யோகதர்ஷினி #வீரதமிழச்சி #Yogadharshini
பயண அனுபவம்
கடந்த அறு மாதங்களுக்கு முன்பாக ஐராவதநல்லூர் தெருக்களில் நானும், கேமரா தம்பியும் யோகதர்ஷினி வீடு தேடி அலைந்து கொண்டிருந்தோம். கேட்டு, கேட்டு, ஒரு வழியாக அவர் வீட்டை கண்டுபிடித்தோம். வாசலில் நின்று சார் என்று அழைக்க யோகதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். செம வெயில் அன்றைக்கு. வெளியில் காத்திருந்தோம். சற்று நேரத்தில் யோகதர்ஷினி வெளியில் வந்து அண்ணா வாங்க என்று கூற, நாங்கள் வந்த நோக்கத்தை கூறினோம். அதுக்கென்ன உடனே எடுக்கலாம் என்று சம்மதம் சொல்ல நாங்கள் மகிழ்ந்தோம். நமது ஹலோ மதுரை மாத இதழ் சிலவற்றை கையில் கொடுத்தோம். ஆனால் அன்றைக்கு எடுக்க இயலவில்லை.
அதன் பிறகு பல முறை தொலைபேசியில் பேசியும், மீண்டும் ஒரு முறை வீட்டிற்குச் சென்றும் எங்களால் எடுக்கவே முடியவில்லை. இப்படியே தள்ளிப் போனது. திடீரென பொங்கலுக்கு முன்பாக சில சேனல்களில் தொடர்ச்சியாக வீடியோ பதிவு வர ஆரம்பித்தது. அதன் பின்பாக தொடர்ச்சியாக எங்கு பார்த்தாலும் வீரத் தமிழச்சி யோகதர்ஷினி என்று வீடியோ பதிவுகள். கடைசியாக அமைச்சர் அழைத்தும் ஆறுதல் பரிசை வாங்க மறுத்த காரணத்தால் மீண்டும் வைரலாக மாறிய யோகதர்ஷினி டிவி, பேப்பர், யூடுப் என இணையதளம் முழுக்க பரவியது.
நாங்கள் அதை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தோம். என்னடா சரவணா இது சோதனை என்று. பொங்கலுக்கு வெளியூர் சென்ற காரணத்தால் வீடியோ எடுப்பது தடைபட்டது. கடைசியாக பேசி பார்க்கலாம் என்று செல்பேசியில் அழைத்தேன். எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். ஆறு மாதம் முன்பு. புத்தகம் என்றதும் சொல்லுங்க என்றார் யோகதர்ஷினி அப்பா திரு.முத்து அவர்கள். சார் எல்லாரும் எடுத்துட்டாங்க, நாங்களும் எடுக்கணும் என்றதும், நாளைக்கு பள்ளி கூடம் திறக்குறாங்க இப்ப எப்படி சார். வேணும்னா இன்னைக்கு மாலை வாங்க என்றார்.
பின்பு கேமரா தம்பி மாலை தொடர்பு கொண்டு, ஓகே வாங்கி, ஒரு வழியாக அங்கு சென்றோம். அங்கு நம்மைப்போல் ஒரு பிரபல தொலைகாட்சிக்காக நிருபர் ஒருவர் வந்திருந்து, சார் கொஞ்சம் வெயிட் பன்ன முடியுமா நா எடுத்துக்குறேன் என்றதும், மறுபடியும் சூரி கதையா முதல்ல இருந்தா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவர் மிகவும் தன்மையாக கேட்டுக் கொண்டதால், மனம் சம்மதம் என்றது.
ஆனால் அரை மணி நேரத்தை தாண்டி விட்டது. அவரது பணி முடியவில்லை. லைட்டிங் போய் கொண்டே இருக்கிறது. எங்கள் கேமரா 6 மணிக்கு மேல் கண்ணை மூடி விடும் என்ற பயம் ஒரு பக்கம், எப்படியோ 5 மணிக்கு ஆரம்பித்துவிட்டோம். அந்த பேட்டிதான் நீங்கள் பார்த்தது. எல்லாரும் கேட்ட கேள்விதான். பாவம் யோகதர்ஷினி எல்லாத்துக்கும் எப்படி பதில் சொன்னாங்க என்று… ஆனா தங்கச்சி தயங்காம பேசுனாங்க.
அதற்கு இடையில், அவரது அண்ணன், தம்பி, அப்பா என்று அனைவரும் கூட இருந்தாங்க. அவசரமாக அவர் அண்ணன் கிளம்பியதால், யோகதர்ஷினி அப்பாவிடம் மட்டும் பேட்டி எடுத்துக் கொண்டு சூட்டிங் எல்லாம் முடித்துக் கொண்டோம். டிரைபேடு ஒரு கால் உடைஞ்சு போச்சு. கேமரா தம்பி சமாளிச்சுதான் எடுத்தாங்க.
எனக்கு என்னவோ இந்த பேட்டியில் மன நிறைவு அடையவில்லை. பல நேரம் திருப்தி கிடைக்காது. இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம். நிறையா கேட்டிருக்கலாம். சரியாக பேசலையோ என்று எனக்கு நானே கேட்டுக்குவேன். அதை அடுத்த அடுத்த பேட்டியில் திருத்திக் கொள்ள முயற்சிப்பேன். உண்மையாவே இந்த பேட்டியில் இன்னும் நான் சிரத்தையோடு பேசியிருக்கணும். அடுத்த முறை அதை சரி செய்துவிடுவேன் என்று நம்புகின்றேன்.
எல்லாரும் பேட்டி எடுத்தனால நா இதுல என்ன புதுசா சொல்லபோறேனு நினைச்சாலும், கூடுதலா அவுங்க அம்மாவ நாங்கதான் காமிச்சியிருக்கோம். எனக்கு எப்பவுமே குடும்பமாக இருந்தாதான் பிடிக்கும். ஏன்னா 50 வருசத்துக்கு அப்புறமா பார்க்கும்போதுதான். அதோடு நினைவுகள் கண் முன் வரும். அப்ப குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் தேடும். அதனால்தான். யோகதர்ஷினிய பொறுத்தவரை அவுங்க அம்மா இந்த வீடியோவில் பதிவு செய்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவுங்களுக்கும் இது மகிழ்ச்சியா இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.
பேட்டிய முடிச்சுகிட்டு தெப்பக்குளத்தில் குடியரசு தின கப்பலை தேடி நானும், தம்பியும் வந்தோம். தேடிப் பார்த்தோம் அதைக் காணம். அப்புறம் என்ன அவரவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று, வேலைய பார்த்தோம். இந்த வீடியோ முடிய இரவு 3 மணி ஆயிருச்சு. காலையில் 7 மணிக்கு ரிலீஸ், பள்ளிகூடமும்தான்.
அடுத்த வீடியோ பயணத்தில் உங்களை சந்திக்கின்றேன்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________