
மதுரை மாடக்குளம் கம்மாயில் இருந்து கோரவாய்க்கால் வழியாக நீர் செல்வது வழக்கம். சரியாக தூர்வாராத காரணத்தினாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் நேற்று மழையால் கோர வாய்க்காலில் இருந்து நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு காளவாசல் பைபாஸ் சாலை, நேரு நகர் சாலை, முத்துநகர் இணைப்பு ஆகிய பகுதியில் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் இந்த வாய்க்கால் அருகே திறந்த நிலையில் மேனுவல் ஒன்று உள்ளது. வாய்க்கால் மூடாமல் இருப்பதால் இரவு நேரங்களில் யாரேனும் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சாலைக்கு செல்லும் நீரால் சாலையில் செல்லும் பொழுது சாலைகள் முழுவதும் அரிக்கப்பட்டு, சாலைகள் சேதம் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .உடனடியாக சாலையில் செல்லும் நீரை தூர்வாரி வாய்க்காலில் செல்லும் வகையில் சரி செய்ய வேண்டும்.
மேலும் திறந்து கிடக்கும் வாய்க்காலை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்கள் யாரும் தவறி விழாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சரி செய்தால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம்.