
மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் இருந்து வருகிறது. இரவு 8:30மணி அளவில் மாடக்குளம் பெரியார் நகர் வழியாக பழங்காநத்தம் நோக்கி சென்ற சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் சென்றுள்ளது
மாணவர் விடுதி அருகே வளைவில் வேகமாக காரை ஒட்டிய நிலையில் நிலைதடுமாறி காலனி தரிசு என்று சொல்லக்கூடிய பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
மேலும் மது போதையில் இருந்த ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுனரின் நண்பர்கள், விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களிடம் சமாதானம் கூறி காரை வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி காவலர்கள் வருவதற்குள் தப்பிச் சென்றனர்.
மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கக்கூடிய அந்த பகுதியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பகுதி மக்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.