செய்திகள்

மாசி மண்டல உற்சவ விழா கொடியேற்றம்; நான்குசித்திரை வீதிகளில் மீனாட்சி அம்மன், சுவாமி வீதி உலா

Madurai News

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 1430-ம் பசலி மாசி மண்டல உற்சவம் 29.01.2021 அன்று இரவு வாஸ்துசாந்தியும், 30.01.2021 அன்று (பகல் நாழிகை 10.30-க்கு மேல் 10.54-க்குள்) காலை 10.00 க்கு மேல் 11.00 மணிக்குள் மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

அன்று இரவு முதல் அருள்மிகு விநாயகர், அருள்மிகுசுப்பிரமணியர், முதல் மூவர், அருள்மிகு சந்திரசேகரர் உற்சவமும், தொடர்ந்து 18.02.2021-ந் தேதி 8.30 மணிக்கு மேல் சுற்றுக்கொடியேற்றம் ஆகி அன்று இரவு முதல் 27.02.2021 முடிய காலை, இரவு இருவேளைகளிலும் நான்குசித்திரை வீதிகளிலும் அம்மனும், சுவாமியும் திருவீதி உலா வந்து பின்னர் திருக்கோயில் வந்து சேர்த்தியாகும் 09.03.2021 அன்று பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும்.

30.01.2021 முதல் 09.03.2021 தேதி பிரதான கொடியறக்கி கணக்கு வாசித்தல் முடிய உள்ள நாட்களில் திருக்கோயில் சார்பாகவும், உபயமாகவும், அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா மற்றும் உபய திருக்கல்யாணம், போன்ற விசேட நிகழ்ச்சிகள் பதிவு செய்து நடத்திட இயலாது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் தக்கார் மற்றும் இணை ஆணையர் / செயல் அலுவலர் செய்து வருகின்றார்கள் என இணை ஆணையர்/செயல் அலுவலர், (ஒ-ம்) க.செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Share Now
Source
Image

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: