மழைநீரினை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் குளம், டவுண்ஹால் ரோடு தெப்பத்திற்கு கொண்டு செல்வற்கான பணி ஆய்வு
Madurai News

மதுரை மாநகராட்சி மேலமாசி வீதி, டவுண்ஹால் ரோடு, பெரியார் பேருந்து நிலையம், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் ஆணையாளர் ச.விசாகன் (03.02.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலமாசி வீதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு மழைக்காலங்களில் மேலமாசி வீதியில் சாலைகளில் சேரும் மழைநீரினையும், மழைநீர் வடிகாலில் செல்லும் மழைநீரினையும் இம்மையிலும் நன்மை தருவார் கோவில் குளத்தில் சேகரிப்பதற்கு வசதியாக கோயில் வாயில் பகுதியில் தொட்டி அமைத்து மழைநீரினை வடிகட்டி குளத்திற்கு கொண்டு செல்வதற்கும், குளத்தில் 20 அடி ஆழத்திற்கு நான்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துமாறும், அதேபோன்று டவுண் ஹால் ரோடு தெப்பக்குளத்தில் ஏற்கனவே பெரியார் பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையத்திலிருந்து மழைநீர்; குளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் மேல மாசி வீதியிலிருந்து மழைநீர்; கொண்டு செல்வதற்காக டவுண் ஹால் ரோடு பகுதியில் தொட்டி அமைத்து மழைநீரினை வடிகட்டி டவுண் ஹால் ரோடு வழியாக குழாய்கள் மூலம் மழைநீர் கொண்டு செல்வதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து துரைச்சாமி நகர் பகுதியில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் அடிக்கடி தேங்குவதாகவும், அதனை நிரந்தரமாக சரிசெய்யுமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி துரைச்சாமி நகர் பகுதியில் மழைநீர் சேகரிக்கும் கிணறு அமைக்கப்பட்டு மழைநீர்; தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மழைநீர் சேகரிக்கும் கிணறினை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாடக்குளம் கண்மாயிலிருந்து நடுமடை வழியாக வெளியேறும் தண்ணீர் துரைச்சாமி நகர் பகுதியில் தேங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு லிப்ட்வெல் அமைத்து தண்ணீரினை வெளியேற்றுமாறும் மற்றும் அருகில் செல்லும் ஏதேனும் வாய்க்காலில் தண்ணீரினை இணைப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் சேகர், செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர்கள் விஜயகுமார், ஆறுமுகம், சந்தனம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், துரைச்சாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.