
மதுரைமாவட்டம் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் (17.02.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கையில்:
பொதுமக்கள் அனைவரும் சாலையில் வாகனங்களைஓட்டிச் செல்லும் பொழுதுதவறாமல் சாலைவிதகளைப் பின்பற்றவேண்டும். அருகில் இருக்கும் இடத்திற்கு இருசக்கரவாகனத்தில் செல்லும்பொழுதுசிறிய தூரம்தான் என்றுநினைத்துதலைகவசம்அணியாமல் செல்வதைதவிர்த்துஅனைவரும் தவறாமல் தலைகவசம் பயன்படுத்தவேண்டும்.
காரில் பயணம் செய்யும் பொழுதுவாகனஒட்டுநர் (டிரைவர்) உட்படஅனைத்துபயணியர்களும் சீட் பெல்ட் அணியவேண்டும். மேலும்,நான்குவழிச்சாலையில் செல்லும் பொழுதுஅரசுஅறிவித்திருக்கும் சமிக்ஞை (சிக்னல்) விதிகளைதவறாமல் பின்பற்றவேண்டும்.
அவசரஊர்திகளுக்கு இருசக்கர,நான்குசக்கரவாகனஓட்டுநர்கள் அவர்களுக்குவழிவிட்டுபயணம் செய்யவேண்டும். அரசுபோக்குவரத்துஓட்டுநர்கள் பயணிகளின் நலனைகருத்திற் கொண்டுபாதுகாப்புடன் பேருந்தை இயக்கவேண்டும். பேருந்துநிறுத்தங்களில் பேருந்தைநிறுத்தும் பொழுதுபின்வரும் வாகனங்கள் எந்த இடையூறும் இல்லாமல்செல்லும் வகையில் நிறுத்தவேண்டும் என்றுதெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிய அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகரபோக்குவரத்துகாவல் துணை ஆணையர் (டிராபிக்)சுகுமாறன், மதுரைசரக இணைய போக்குவரத்து ஆணையர் பொன்.செந்தில்நாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வடக்கு செல்வம்,போக்குவரத்துகாவல் ஆய்வாளர் பால்தாய்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், சரவணக்குமார், பிரபு, மாணிக்கம், அனிதா உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.