
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் உத்தரகண்ட் மாநிலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ளதாக வந்த செய்தியை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தரவின்பேரில் மாவட்ட சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறையினரின் நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.
மீட்கப்பட்ட அந்த இளைஞர் மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இன்று (18.05.2022) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலம், பாகேஷ்வர் மாவட்டம் கரூர் தாலுகாவில் சுர்ஜித் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் அலைந்து திரிந்துள்ளார்.அவர் சமூகநல ஆர்வலர் அகில் ஜோஷி மற்றும் உள்ளுர் மக்களால் மீட்கப்பட்டார்.
இந்த தகவல் உத்தரகண்ட மாநில உள்ளுர் செய்தித்தாளான அமர் உஜாலாவில் மே 13-ஆம் தேதி வெளியானது.விசாரணையில் அவர் பெயர் வெங்கடேஷ் என்றும் ஊர் மதுரை “தினமணி டாக்கீஸ்” அருகே தன் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்ததாகக் கூறியுள்ளார்.
மேலும்,அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அவரால் வேறு எந்த விபரங்களையும் கொடுக்க முடியவில்லை.இந்த செய்தி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் துணை செயலாளர் மற்றும் ஆணையர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சமூகநல அலுவலர் நளினாராணி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கண்ட நபரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட நபர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடுஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை உடனே 17.05.2022-அன்று மீட்க வேண்டும் என்ற அவசர தகவலை அடுத்து சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் நிர்வாகத்தினர் மற்றும் அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் டெல்லி சென்று மேற்கண்ட வெங்கடேஷ் பத்திரமாக மீட்டு 18.05.2022-அன்று மதுரை சமூக நலத்துறை மூலம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் நிர்வாகத்தின் பராமரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தரகண்டில் மீட்கப்பட்டதவெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், மீட்பு குழுவினரான சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் நிர்வாகத்தினர் மற்றும் அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகத்தினரை பாராட்டினார்.