செய்திகள்முகாம் | மருத்துவம்

மதுரை ஹனா ஜோசப் மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு மூளை தண்டுவட அறுவை சிகிச்சை | மருத்துவர்கள் சாதனை

An 11-year-old girl underwent brain stem surgery at Hana Joseph Hospital, Madurai Doctors feat

திருச்சி வெங்கடேஸ்வரா நகர் துரைராஜன் என்பவரின் மகள் நிதிஷா (வயது 11) 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு மூளை தண்டுவட பகுதியில் “ஸ்வானானோமா” எனப்படும் கட்டியிருந்தது. கடந்த 8 மாதமாக இந்த கட்டியினால் பாதிக்கப்பட்டு உடல்நிலை செயல் இழந்து அவதியுற்றார்.

இந்நிலையில் மதுரை ஹனா ஜோசப் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த (15.06.22) அன்று நடந்த முதல் கட்ட அறுவை சிகிட்சை ஒன்பது மணி நேரம் நடைபெற்றது.

அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து நடைபெற்ற 2வது முறையாக கடந்த (18.06.22) அன்று 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையின் பலனாக, சிறுமி நிதிஷா பூரண குணமடைந்தார்.

இது குறித்து ஹனா ஜோசப் மருத்துவ மனை அருண்குமார் கூறுகையில், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை என்பது மிகவும் கடுமையானது. பொறுமையாக கையாள வேண்டும். சிறிது கவனம் சிதறினாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, கவனத்துடன் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுவரை 17 வயதுக்குட்பட்வர்களுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிட்சை நடைபெற்றுள்ளது. தற்போது 11 வயது சிறுமி நிதிஷாவுக்கு அதுவும் 21 கிலோ எடை குறைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதன் முறை என்பதும், அந்த அறுவை சிகிச்சையில் குழந்தை பூரண குணம் அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தகது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: