செய்திகள்புகார்

மதுரை வைகை ஆற்று தடுப்பணைகளில் தண்ணீருடன் நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம்

People are afraid because of foaming with water in the barrages of Waikai River

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு முழுவதிலும் பெய்த கன மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதையடுத்து வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நுரை பொங்கி நிற்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பு பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டவரும் நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால் நுரை பொங்குகிறதா ? இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா ? என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

மழை பெய்துவரும் நிலையில் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: