செய்திகள்மாநகராட்சி

மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணிகள்

Madurai Vaigai river areas intensive cleaning work on behalf of the corporation

மதுரை மாநகராட்சி வைகை ஆற்றுப் பகுதிகளில், “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர், ஆலோசனையின்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்பட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஆழ்வார்புரம் வைகை வடகரை, மதிச்சியம் பகுதிகள், குருவிக்காரன் சாலை பாலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஜக்காத்தோப்பு பகுதிகள், தத்தனேரி படித்துறை பகுதிகள், மேல அண்ணாத் தோப்பு, பேச்சியம்மன் படித்துறை, கல்பாலம், செல்லூர் ரவுண்டானா, ஓபுளாபடித்துறை பகுதிகள், ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம் பகுதிகள், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வைகை ஆற்றில் கல்பாலத்தில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகள் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்வதற்கு பணிகள் நடைபெற்றது. இப்பணியின்போது, தூய்மை குறித்த உறுதிமொழியினை அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக்
கொண்டனர். இந்த தூய்மைப்பணியில், சுமார் 600 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்பணியில், உதவி ஆணையாளர்கள் மனோகரன், அமிர்த லிங்கம், சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், விஜயகுமார், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள், உதவிப் பொறியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: