செய்திகள்போலீஸ்

மதுரை வைகையாற்றில் மூழ்கி 2 பேர் பலி | நான்கு பேர் மாயம்

Madurai drowned in Vaigaya river, 2 people died Four people are magic

மதுரை மாவட்டம் கரடிக்கல் அருகே வைகை ஆற்றில் சுழலில் சிக்கி 2 பேர் பலியாயினர். மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றில் மூழ்கி இருவர் பலியாகி உள்ளனர். மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த வினோத்குமார் சிஆர்பிஎப் வீரராவார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நண்பர் அன்பரசனும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுழலில் சிக்கிய அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திருமங்கலம், செக்கானூரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: