செய்திகள்
மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் வேளாண் செயலிகள் விழிப்புணர்வு முகாம்
Agricultural Processors Awareness Camp on behalf of Madurai Agricultural College Students

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருபகுதியாக தேவசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 05/02/22 அன்று அலங்காநல்லூர் பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
அம்முகாமில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் செயலிகளை பற்றியும், அவற்றை கையாளும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பூச்சி மற்றும் நோய் தாக்கத்தை கண்டறிவது, சந்தை விலை, உரங்கள் இருப்பு நிலை, மானிய திட்டங்கள், பயிர் மருத்துவ ஆலோசனை போன்ற பல சேவைகளை வேளாண் செயலிகள் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
+1
+1
+1
+1
+1