
மசாலா பொடிகள் தயாரிப்பது முதல் சந்தை படுத்துவது வரை உள்ள அனைத்து நுணக்கங்கள் தெரிந்து கொள்ள ஓர் வாய்ப்பு வழங்குகிறது மதுரை வேளாண் அறிவியல் மையம். இதற்கான பயிற்சி வரும் (11/01/21 – 13/01/21) வரை நடைபெறுகிறது. முன்பதிவு செய்யும் முதல் 20 நபர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சியில் பங்கேற்க இயலும்.
நல்ல வருவாய் தரக்கூடிய சிறுத்தொழில்களில் இன்று மசாலா பொடி தயாரிப்பு முதன்மையாக மாறி வருகிறது. உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரை இன்று இந்திய பாரம்பரிய மசாலா பொடிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறைவான முதலீட்டில், நிறைவான லாபம் தருவதால் இதில் பெண்கள், இளைஞர்கள்என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்: உணவுத்துறை வல்லுனர்களின் துணையுடன் பயிற்சியில் பிரியாணி மசாலா பொடி, சன்னா மசாலா பொடி, கரம் மசாலா பொடி, குழம்பு பொடி, சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி பொடி, பருப்பு பொடி, முருங்கை பொடி, கருவேப்பிலை பொடி தயாரிப்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் பயிற்றுவிக்கப் படும்.
பாதுகாப்பான உணவு பொருள் மற்றும் சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்து என்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு சான்றிதழ் மிக அவசியம். எனவே இப்பயிற்சியுடன் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையத்திடம் உரிமம் எவ்வாறு பெறுவது என்பது விளக்கப்படும்.
புதிதாக தொழில் முனைய விரும்புவார்கள் எவ்வாறு வங்கியை அணுகுவது, தயாரித்த பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது போன்ற விளக்கங்கள் இப்பயிற்சியில் அளிக்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் மையம், மதுரை என்ற முகவரியிலோ அல்லது 9498021304, 96774 71079 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.