
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் பயின்ற 360 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 753 வேலைவாய்ப்பு கடிதம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம். வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்புரை கூறினார்.
சிறப்பு விருந்தினராக மதுரை வருமானவரித்துறை ஆணையர் சீமாராஜ் , IRS மற்றும். வேலம்மாள் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவரும் தற்போது IPS பயிற்சி பெற்று வரும் திரு.மதன்குமார். IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளிலிருந்து டி.சி.எஸ்.விப்ரோ, எச்.சி.எல். டாடா, போன்ற முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்சமாக வருடத்திற்கு 6 லட்ச ரூபாய்யும். அதிக பட்சமாக 20 லட்ச ரூபாய் சம்பளம் என முன்னணி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கியது குறிப்பிடதக்கது.
சிறப்பு விருந்தினர் சீமா ராஜ் குறிப்பிடும் போது. வேலம்மாள் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் 98% சத வேலை வாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கல்லூரிகளில் ஆய்வுகங்களை ஆய்வு செய்துள்ளேன். ஆய்வக ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள் சிறப்பாக எம் ஐ டி.,ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் வளர்ச்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆகையால் சிறப்பாக செயல்பட்டு சிறந்த எதிர்காலத்தை உறுவாக்குங்கள்
வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் குறிப்பிடுகையில் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு மாணவனின் பெற்றோர் தன் மகனுக்கு அரசு வேலைதான் வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல. அனைவரும் அரசு வேலை என்றால் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி போன்றவர்கள் வந்திருக்க முடியாது. ஆகையால் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் என கூறினார்.