மதுரை வெள்ளைக்கல் & திருப்பரங்குன்றம் உரம் தயாரிப்பு மையத்தில் அடர்வனம் முறையில் மரக்கன்றுகள் நடும் பணி
Madurai News

மதுரை மாநகரினை பசுமையான, தூய்மையான, மாநகராக மாற்றுவதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும்,மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குறுங்காடுகளை உருவாக்கும் வகையில் குறைந்த இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான விளாங்குடி இந்திரா நகர், தத்தனேரி மயானம், எல்லீஸ் நகர் நீரேற்று நிலையம், கோச்சடை, விளாங்குடி மயானம், கற்பக நகர் நீரேற்று நிலையம், மஸ்தான்பட்டி பழத்தோட்டம், அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி, சாத்தமங்கலம் வார்டு அலுவலகம், மதிச்சியம் வார்டு அலுவலகம், செல்லூர் மேல்நிலைத்தொட்டி, தமுக்கம் ராஜாஜி பூங்கா, டாக்டர் தங்கராஜ் சாலை வார்டு அலுவலகம்.
மேலும் ரிசர்வ் லைன் மேல்நிலைத் தொட்டி, ஐராவதநல்லூர் நுண்ணுயிர் உரக்கூடம், அனுப்பானடி ஆடுவதைகூடம், மூலக்கரை மயானம், அவனியாபுரம் பைபாஸ்ரோடு, ஐ.ஐ.ரோடு, எம்.எம்.சி.காலனி நுண்ணுயிர் உரக்கூடம், வெள்ளைக்கல் நுண்ணுயிர் உரக்கூடம், திருப்பரங்குன்றம் நுண்ணுயிர் உரக்கூடம், ஹார்விப்பட்டி நுண்ணுயிர் உரக்கூடம் ஆகிய 25 இடங்களில் மியாவாக்கி (அடர்வனம்) முறையில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 மரக்கன்றுகள் வீதம் சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டு 8 அடி முதல் 10 அடி வரை வளர்க்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சிலையனேரி. எல்லீஸ்நகர், விராட்டிபத்து, டுவார்டு காலனி, முந்திரித்தோப்பு, துரைச்சாமி நகர், பாண்டியன் நகர், திருநகர் உள்ளிட்ட 15 இடங்களில் புதிதாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடப்பட்டு வருகிறது.
தற்போது மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.94 வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு மற்றும் உரம் தயாரிக்கும் 1.54 ஏக்கர் பரப்பிலும், வார்டு எண்.96 திருப்பரங்குன்றம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் 0.57 ஏக்கர் பரப்பிலும் என 2.11 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நட்டு இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு செய்வதற்கு தானம் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மியாவாக்கி முறையின் மூலம் மரக்கன்றுகள் நடுவதால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம் நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறைவதுடன் காற்றின் ஈரப்பதமும் தக்கவைக்கப்படும். இந்த சிறிய வனத்திற்குள் பறவைகள், சிறிய புழு பூச்சிகள், தேனீக்கள் அதிகளவில் வாழ்வதற்கான சூழல் ஏற்படுவதுடன் உயிர்சூழல் மேம்படும்.