ஆன்மீகம்செய்திகள்

மதுரை வில்லாபுரத்தில் சங்க விநாயகர் கோவில் | அகற்ற வந்த நெடுஞ்சாலைத் துறையினர் | தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகிகள்

Sanga Ganesha Temple at Madurai Villapuram | Highways Department to remove | Detained temple administrators

மதுரை விமான நிலையம் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்க விநாயகர் கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதால் நெடுஞ்சாலைதுறையினர் அகற்றக்கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.

அதற்கு கோவில் நிர்வாகமும் 15 நாட்களில் அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்பு அகற்றாததால் நெடுஞ்சாலைத் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனம் கொண்டு இடிக்கத் தொடங்கினர்.

எனவே இதனைத் தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகம் மற்றும் இந்து முன்னணியினர் இன்னும் இரண்டு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இடிக்க ஜேசிபி வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் வில்லாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: