செய்திகள்போலீஸ்

மதுரை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.14.50 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கம் | தூக்கி வீசிய பயணி யார் ?

281 grams of gold worth Rs 14.50 lakh found in Madurai airport garbage bin | Who threw the passenger?

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8:20 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 170 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற தங்கப்பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றுள்ளார்.

பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் கண்டுபிடித்து இதுகுறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர்.

அதில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்புள்ள 287 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

ரூபாய் பதினாங்கரை லட்சம் மதிப்புள்ள தங்கத்தை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளதால் விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: