செய்திகள்

மதுரை விமான நிலையம் | ரூ.43¼ லட்சம் தங்கம் பறிமுதல்

Madurai Airport | Rs 43 lakh gold confiscated

கொரோனா கால கட்டத்திற்கு பின்னர், மதுரையில் இருந்து துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த தனியார் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணியின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், துபாய் விமானத்தில் வந்திறங்கிய நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. அவரிடம் பச்சை நிறத்தில் உருளை வடிவிலான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை சோதனை செய்தபோது, அதில் களிமண் போன்ற பொருளுடன் தங்கத்துகள்கள் கலந்து கடத்தி வந்தது உறுதியானது. அந்த உருளைகளின் மொத்த எடை 1046 கிராம்.

அதனை தீயில் சுட்டு, பிரித்தெடுத்த பின்னர், 831 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் மொத்த மதிப்பு ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 524 ஆகும். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: