செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் பார்சலில் வந்த மர்ம பொருளால் பரபரப்பு

Excitement over the mysterious object that arrived in the parcel at the Madurai airport

விமானம் மூலம் டெல்லி செல்லும் 4 பார்சல்களை ஸ்கேன் செய்தபோது வயர் போன்ற மர்ம பொருளால் பதட்டம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது திருநெல்வேலியில் இருந்து டெல்லிக்கு அனுப்ப வந்த பார்சலில் வயர் போன்ற பொருள் தெரிந்ததால் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நான்கு பார்சல்களை பாதுகாப்புடன் எடுத்து சோதனை செய்தனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டு 4 பார்சல்களும் பாதுகாப்பாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு போலீஸாரால் சோதனை செய்தனர். மான்சரம், பார்க் உத்தம் நக,ர் டெல்லி என்ற முகவரிக்கு 4 பார்சல்கள் அனுப்பபட்டது.

பார்சல்களை வெடிகுண்டு தடுப்பு போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து பார்த்த போது அதன் உள்ளே டைரிகள் மற்றும் பரிசு பொருட்கள், சார்ஜர் வயர் இருந்தன. பார்சலில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தால் சிறு நேரம் பரபரப்பாக இருந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: