மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடம்
Independence Day Celebration at Madurai Airport

மதுரை விமான நிலையத்தில் 75 வது சுதந்திர தின அமுத விழா கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலைய இயக்குநர் பாபுராஜ் தேசிய கொடி மரியாதை செலுத்தினார்.
துணைகமாண்டர் உமா மகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மத்திய தொழிற் பாதுகாப்பு படைதுணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மதுரை விமான நிலைய பொது மேலாளர் ஜானகிராமன் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களின் அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர் தேசிய கொடியை ஏற்றி வைத்து விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் கூறும் போது மதுரை விமான நிலையம் பொருளா காலகட்டங்களில் உள்நாட்டு விமான சேவை 90% ஆகவும் பன்னாட்டு விமான சேவை இரவு சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 4 லட்சம் லிட்டர். குடிநீருக்காக இரண்டு லட்சம் லிட்டரும் தன்னிறைவு பெற்றுள்ளோம் என கூறினார்.
அணிவகுப்பில் பாதுகாப்பு படை சேர்ந்த வீரர்கள் சரவணன் கதிரவன் முத்துக்குமார் ரமேஷ் ஆகியோர் சிலம்பாட்ட நிகழ்ச்சியில் சிறப்பாக செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மோப்பனை பிரிவில் உள்ள விக்டர், மாறன், டோனி ஆகியவை சிறப்பாக செயல்பட்டு பைகளில் இருந்த கண்டறிந்து அடையாளம் காட்டியது போன்ற சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.