
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலுள்ள ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள தும்மங்குண்டு அஞ்சல் T.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார் அவரது உடல் விமான மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுகவினருக்கும் பிஜேபியினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிஜேபி தொண்டர்கள் பலர் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.