மதுரை விமான நிலையத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
Drug Awareness Rally at Madurai Airport

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முதல் பெருங்குடி வரையிலான 3 கி.மீ தூரத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் 80 பேர் பேரணியில் பங்கு பெற்றனர். போதை நமக்கு பகை , போதை பழக்கத்தை கைவிடுவோம் என்பது உள்பட பல்வேறு போதை பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணி நடைபெற்றது.
முன்னதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுதப்படை மைதானத்தில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் உமாமகேஸ்வரன், உதவி கம்மாண்டன் சனீஸ்க் ஆகியோர் உறுதிமொழியினை ஏற்றனர்.