செய்திகள்போக்குவரத்துபோலீஸ்

மதுரை விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு

Unexpected explosion of gun at Madurai airport creates excitement

மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆயுத கட்டிடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் பணியாற்றி வருகின்றார். வழக்கம்போல் இவர் இரவு பணியை முடித்துவிட்டு, 9 எம்எம் தோட்டா வகை துப்பாக்கியை உரிய அதிகாரியிடம் ஒப்படைக்கும் போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி தானாக வெடித்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டர் உமாமகேஸ்வரன் சம்பவ இடத்தை முதல் கட்டமாக ஆய்வு செய்தார். மேலும், துப்பாக்கி வெடித்தற்கான காரணம் குறித்து துறைரீதியான விசாரணை நடைபெற்றது.

எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்தச் சம்பவத்தால் மதுரை விமான நிலையம் சற்று பரபரப்பானது என்னவோ உண்மைதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: