செய்திகள்போலீஸ்

மதுரை வாடிப்பட்டி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது | 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Two arrested for smuggling cannabis on bike near Madurai Vadippatti | 8 kg of cannabis seized

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் போதை தடுப்பு காவல் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நெல்லூரை சேர்ந்த முத்துபாண்டி, ஆத்தூர் தாலுகா சித்தரேவை சேர்ந்த ரோஷன் ( 20), என்பதும் இருசக்கரவாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியதும் தெரிய வந்தது.

மேலும் இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்கள் கடத்திவந்த 8 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த வாடிப்பட்டி போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: