
மதுரை வாடிப்பட்டி வட்டம் இரும்பாடி கிராமத்தில் இன்று 1.8.2022 மாலை சுமார் 6.30 மணியளவில் மதுரையிலிருந்து அய்யம்பாளையம் சென்ற பாண்டி முருகன் என்ற தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், காயம் அடைந்த 6 நபர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், நேரடியாக சந்தித்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். உடன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1