செய்திகள்விவசாயம்

மதுரை வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம்

Near Madurai Vadipatti there is a risk of fallow of agricultural land due to negligence of the authorities

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் ஆண்டிப்பட்டி பங்களா சின்னம்ம நாயக்கன்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித் துறையின் அலட்சியம் காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் முறையாக தண்ணீர் திறக்காததால் சுமார் 100 ஏக்கர் தரிசாக மாறும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் தலையிட்டு விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த. பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறும் போது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது ஒரு சில தனி நபர்களின் ஆதிக்கம் காரணமாக முறையாக தண்ணீர் விடாததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்முறையிட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: