மதுரை வழியாக மைசூர் – திருவனந்தபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்
Mysore - Thiruvananthapuram Festival Special Train via Madurai

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர் – திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மைசூர் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06201) செப்டம்பர் 7 அன்று மதியம் 12.15மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் – மைசூர் சிறப்பு ரயில் (06202) செப்டம்பர் 8 அன்று மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இது ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.