மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை
Weekly special train service between Tirunelveli - Mettupalayam via Madurai

விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 19 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.