மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின தன்னார்வ போட்டிகள் சான்றிதழ்
Independence Day Voluntary Competition Certificate by Madurai Guiding Men Trust

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின 75வது சுதந்திர தின அமுதவிழா செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. விடுதி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
இல்லத்தின் தலைமை நிர்வாகி சீனிவாசன் முன்னிலையில் பொறுப்பாளர் கார்த்திக் ஒருங்கிணைப்பில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத மாணவர்கள் அனைவருக்கும் பேனா மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கவிஞர் ரவி, கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார்.
மேலும், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக்மஸ்தான், சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் கிரேசியஸ், சமூக ஆர்வலர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று களப்பணியிலும் ஈடுபட்டனர். விடுதி பொறுப்பாளர் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர்.