செய்திகள்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையாக்கு வாழ்த்து

Madurai News

இந்திய அரசு மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது அறிவித்துள்ளது. இதற்காக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களை சந்தித்தனர்.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்து மடல் வழங்கினார். அப்போது சாலமன் பாப்பையா அவர்கள் வழிகாட்டி மணிகண்டனிடம் சமூக சேவைகள் குறித்து கேட்டறிந்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் இல.அமுதன், அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், புத்தக தான வங்கி அமைப்பாளர் அசோக்குமார் மற்றும் எம்மால் இயன்றது கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்து வாழ்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: